Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM
வெளி மாவட்டம், வெளி மாநிலங் களிலிருந்து திருவாரூருக்கு வருபவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப் பட்டு வருவதாக ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்தார்.
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மடவிளாகம் தெரு, திருவாரூர் வட்டம் தண்டலை ஊராட்சிக்குட்பட்ட எழில்நகர், கீழகாவதுகுடி ஊராட்சிக்குட்பட்ட சிதம்பர நகர் ஆகிய பகுதிகளில், கரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் ஆட்சியர் வே.சாந்தா நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
திருவாரூர் மாவட்டத்துக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவும், தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளும் வகையில் வீட்டைவிட்டு வெளியில் வருவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், உடல்நிலை சரியில்லாதவர்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வரும் சூழல் ஏற்பட்டால், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கிருமிநாசினி கொண்டு, அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.
மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து, கரோனா தொற்றிலிருந்து தம்மை பாது காத்துக்கொள்வதுடன், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, உதவி இயக்கு நர்(ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டாட்சியர் நக்கீரன், நகராட்சி ஆணையர்(பொ) சண்முகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT