Published : 23 Apr 2021 03:16 AM
Last Updated : 23 Apr 2021 03:16 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கூறியிருப்பதாவது: மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மனவளர்ச்சி குன்றியோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல்மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.1,500 வழங்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும், மாவட்ட மாற்றுத்திறானளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுஅந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று உரியசான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கும், ஒரு நகலை மாதாந்திர பராமரிப்பு உதவிதொகை பெறும் வங்கிக்கும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461 234 0626 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT