Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM

வேலூரில் - கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது :

வேலூர்

வேலூரில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த கடை உரிமையாளரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

வேலூர் சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர் தேவ்ஆனந்த்அகர்வால் (44). இவர், பிஎஸ்எஸ் கோயில் தெருவில் பேன்சி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது கடையில் அதிக வாடிக்கையாளர்களை கூட்டி அவர் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடைக்கு அபராதம் விதிப்பு

அப்போது, வேலூர் கிராம நிர்வாக நிர்வாக அலுவலர் ரஞ்சித் என்பவர் மாநகராட்சி ஊழியர்களுடன் கரோனா தடுப்புப்பணிகளை அப்பகுதியில் மேற்கொண்டார். ஒரே கடையில் அதிக அளவிலான ஆட்களை கூட்டியதால் அந்த கடைக்கு கிராம நிர்வாக அலுவலர் அபராதம் விதித்தார்.

கடை உரிமையாளர் கைது

இதை ஏற்க மறுத்த கடை உரிமையாளர் தேவ்ஆனந்த்அகர்வால் அபராத தொகை செலுத்த முடியாது எனக்கூறி கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த தேவ்ஆனந்த்அகர்வாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x