Published : 20 Apr 2021 03:16 AM
Last Updated : 20 Apr 2021 03:16 AM

கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல் :

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசினார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

``தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை” என, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக, செய்தியாளர் களிடம் அவர் மேலும் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி தீவிரமாகநடைபெற்று வருகிறது. தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் 80 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது.

கரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினமும் சராசரியாக 1,000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை.

இன்றைய நிலவரப்படி 5,000 டோஸ் தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது. மேலும், திருநெல்வேலி மற்றும் மதுரையில் உள்ள குளிர்பதன கிடங்கில் தேவையான தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து நமது தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி தடுப்பூசி போடுவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு காணொலி காட்சி மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்வதும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் நல்லது” என்றார் ஆட்சியர்.

ஆலோசனைக் கூட்டம்

தொடர்ந்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளஇரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்பி எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x