Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள், தியேட்டர்களில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கலாம் என ஆர்டிஓ தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று திருமண மண்டபம், மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
ஆர்டிஓ கற்பகவள்ளி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதையும், அரசுகளின் வழிகாட்டுதல் களையும் விளக்கிக் கூறி, மண்டபங்களில் நடைபெறும், திருமண நிகழ்ச்சிகளில், 100 பேர் மட்டும் சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும், தியேட்டர்களிலும், சமூக இடைவெளியுடன் இருக் கைகள் அமைக்க வேண்டும். அனைவரையும், தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு, உட்படுத்திய பின்னரே, அனுமதிக்க வேண்டும், அனைவரும், முகக்கவசம் அணிய வேண்டும், சானிடைசர், மற்றும் கைகழுவும் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
தியேட்டர்களில் இடை வேளை நேரங்களில் கரோனா விழிப்புணர்வு விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும், அதேபோல, 45 வயதிற்கு மேல் உள்ள பணியாளர்கள், தடுப்பூசிகள் போட்டுள்ளனரா என்பதை, உறுதி செய்ய வேண்டும், உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், மண்டபம் மற்றும் தியேட்டர்களில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவைகளையும் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இக்கூட் டத்தில் கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்திலுள்ள, 37 திருமண மண்டபம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT