Published : 17 Apr 2021 03:16 AM
Last Updated : 17 Apr 2021 03:16 AM
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தத் துடன் சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை தொடங்கியது.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை வசந்த உற்சவம் சிறப்பு பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு நேற்று மாலை பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும் மற்றும் இரவு 7 மணியளவில் மண்டகபடி நடைபெறும்.
விழாவின் நிறைவாக அய்யங்குளத்தில் சுவாமியின் தீர்த்தவாரியும், அன்றிரவு கோபால விநாயகர் கோயிலில் மண்டகபடியும் மற்றும் அண்ணாமலையார் கோயில் கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT