Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

மனைவி தூக்கிட்டு தற்கொலை : கணவர் தற்கொலை முயற்சி :

மதுரை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (25). தச்சு வேலை செய்து வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உமாதேவி (20) என்பவரை காதலித்துத் திருமணம் செய்தார். பின்னர், மதுரை ஜெய்ஹிந்த்புரம் லட்சுமிபுரத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பு வந்து வாடகைக்கு வீடு பிடித்து வசித்து வந்தனர். நேற்று காலை 9 மணி வரை வீடு திறக்காமல் இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் வேலுமணி மாதவன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கதவைத் திறந்து பார்த்தபோது உமாதேவி தூக்கிட்டு இறந்த நிலையிலும், மற்றொரு அறையில் பாலகிருஷ்ணன் கழுத்தறுத்து உயிருக்குப் போராடியதும் தெரிந்தது. அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பினர். குடும்பப் பிரச்சினை காரணமாக இரவில் உமாதேவி தற்கொலை செய்திருக்கலாம் என்றும், இதை அறிந்து வேதனையில் பாலகிருஷ்ணனும் தனக்குத் தானே கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பு உறவினர்களிடமும் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x