Published : 14 Apr 2021 03:15 AM
Last Updated : 14 Apr 2021 03:15 AM

சாத்தூரில் வீட்டில் வெடி, திரி தயாரிப்பு : 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு :

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே உள்ள சல்வார்பட்டியில் வீட்டில் பட்டாசுகள் மற்றும் பட்டாசு திரி தயாரிப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா மற்றும் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தினர்.

பட்டாசு ஆலை அருகே ஒரு வீட்டில் சரவெடி மற்றும் பட்டாசு திரி தயாரிப்பது கண்டறியப்பட்டது. அதிகாரிகளைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். வீடுகளில் சரவெடிகள், 120 குரோஸ் கருந்திரி, வெள்ளைத்திரி 260 குரோஸ், திரி சுற்றும் காகிதம் 150 குரோஸ் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக சூலக்கரை ரெங்கநாயகி, மணிகண்டன், வீரபாண்டி, கோவிந்தராஜ், சுந்தர்ராஜ், சுலோச்சனா, கணேஷ்வரி ஆகியோர் மீது வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x