Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் மின்னணு இயந்திரங்கள், விருதுநகர் வித்யா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டுப்பாட்டு அறையை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.கண்ணன் நேற்று ஆய்வு செய்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உடன் இருந்தார்.
ஆட்சியர் இரா.கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்கு எண்ணும் மையத்தைப் பாதுகாப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT