Published : 02 Apr 2021 03:14 AM
Last Updated : 02 Apr 2021 03:14 AM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி மாலை 7 மணிக்குள் தேர்தல் பிரச்சாரத்தை முடித் துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 6-ம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள பதற்ற மான வாக்குச்சாவடிகளில் மேற் கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் வரும் 4-ம் தேதி மாலை 7 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு எந்த ஒரு வேட்பாளரும் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது. சினிமா படங்கள், தொலைக்காட்சி வாயிலாக வேறு சமூக ஊடகங்கள் வழியாகவும் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது. வாக்காளர்களை கவரக்கூடிய வகையில் எந்தவொரு இசை நிகழ்ச்சியையோ ஒலி மற்றும் ஒளிபரப்பக்கூடாது. வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருவதை கண்காணிக்க சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் சொந்தப் பயன்பாட்டுக்கும், தேர்தல் முகவர் பயன்பாட்டுக்கான ஒரு வாகனம், வேட்பாளரின் உதவியாளர்கள் பராமரிப்புக்கு ஒரு வாகனம் என தனித்தனியாக வாகன அனுமதி பெற வேண்டும்.
வாகனங்கள் மூலமாக வாக்கா ளர்களை அழைத்து வரவோ, வாக்களித்த பிறகு அவர்களை அழைத்துச் செல்லக்கூடாது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் வேட்பாளர் தற்காலிக அலுவலகம் அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். இங்கு, இரண்டு பேர் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். இங்கு உணவு, திண்பண்டங்கள் எதுவும் வழங்கக்கூடாது. குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் தங்கியிருக்க அனுமதிக்கக்கூடாது’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT