Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM
விருதுநகர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கியது.
விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகள் உள்ளன. இதில், திருச்சுழி தொகுதியில் 20 வேட்பாளர்களும், சிவகாசியில் 24 பேரும், அருப்புக்கோட்டை- 29 பேர், ராஜபாளையம்- 14 பேர், வில்லிபுத்தூர் - 15 பேர், விருதுநகர் - 18 பேர், சாத்தூர்- 27 பேர் போட்டியிடுகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் 5,058 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,965 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,085 வாக்காளர் தங்கள் அளித்த வாக்குகளைச் சரிபார்க்கும் இயந்திரம் என மொத்தம் 11,108 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2,370 வாக்குப்பதிவு மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. நேற்று முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி, காரியாபட்டி சி.இ.ஓ.எ. கல்லூரி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான இரா.கண்ணன் பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT