வெள்ளி, நவம்பர் 08 2024
Last Updated : 31 Mar, 2021 03:16 AM
Published : 31 Mar 2021 03:16 AM Last Updated : 31 Mar 2021 03:16 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே பில்லூர் அழுபிள்ளைதாங்கியைச் சேர்ந்த விவசாயி கருப்பையா (60). இவரது மகன் சாமிநாதன் (35). நேற்று முன்தினம் கருப்பையா ஆடு மேய்க்கவும், சாமிநாதன் விவசாயப்பணிக்காகவும் சென்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக பில்லூரைச் சேர்ந்த பாண்டி மகன்கள் தாமோதரன் (35), திரிசங்கு (44), சிங்கராஜ் (38) ஆகிய மூன்று பேர் திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT