Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி யில் சென்னை வெப்ரக்ஸ் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
நிறுவனப் பொது மேலாளர் கே.கோடீஸ்வரன் தலைமை வகித்தார். மேலாளர்கள் கே.பிர காஷ், ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உற்பத்தி மேலாளர் ஏ.ஜெய்கணேஷ் வரவேற்றார்.
60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற எலக்ட்ரிக்கல்-எலக்ட்ரானிக்ஸ், கணினி மற்றும் அறிவியல்துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தொழில்நுட்ப எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று இரண்டு சுற்றுகளாக நடந்தது. இதில் 13 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பணி நியமன ஆணையை கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு, இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார், முதல் வர் சி.மதளைசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் அன்னை அபிராமி, துணை முதல்வர் என்.மாதவன், கல்லூரிப் பெண்கள் உரிமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT