Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM
தூத்துக்குடியில் திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சுபாஷ் பண்ணையார் மீதும், விஜய் மக்கள் இயக்க ஒன்றிய தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகி பில்லா ஜெகன் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்த ஜேசு மகன் ஜெகன்என்ற பில்லா ஜெகன் (46). இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், விஜய்மக்கள் இயக்கத்தின் மாவட்டசெயலாளராகவும் பொறுப்புவகிக்கிறார். திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான பில்லா ஜெகன், அந்த தொகுதியில் அவருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் பில்லா ஜெகன் மற்றும் சுபாஷ் பண்ணையார் இடையே நடைபெற்ற செல்போன்உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில்பில்லா ஜெகனுக்கு சுபாஷ் பண்ணையார் கொலை மிரட்டல் விடுத்து பேசுகிறார். இது தொடர்பாக பில்லா ஜெகன் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார்செய்தார். அதன்பேரில் சுபாஷ் பண்ணையார் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் ஆகியபிரிவுகளின் கீழ் தூத்துக்குடிவடபாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ளவீரபாண்டியன்பட்டினம் ராஜ்கண்ணா நகரை சேர்ந்த முத்துவேல்பாண்டி என்றகுட்டி (37). இவர், திருச்செந்தூர் ஒன்றியவிஜய் மக்கள் இயக்க தலைவராகஉள்ளார். இவர் சுபாஷ் பண்ணையாரின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. இவர் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வேலை செய்து வருகிறார். இது பில்லா ஜெகனுக்கு பிடிக்காததால் தனக்கு அவர் செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக குட்டி திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை புகார் அளித்தார். அதன்பேரில் பில்லா ஜெகன் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருச்செந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ்விவகாரம் திருச்செந்தூர் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் போலீஸார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் துள்ளனர்.
பில்லா ஜெகன் மற்றும் சுபாஷ் பண்ணையார் இடையே நடைபெற்ற செல்போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT