Published : 30 Mar 2021 03:16 AM
Last Updated : 30 Mar 2021 03:16 AM

தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளை ஏப்.4 முதல் 6 வரை மூட உத்தரவு :

விருதுநகர்: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து வகை பார்களையும் ஏப்.4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து வகை பார்களும் ஏப்ரல் 4 முதல் 6-ம் தேதி வரை மூட உத்தரவிடப்படுகிறது. உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் பார்களை நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x