Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM

புவனகிரி தொகுதியின் - அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன் : அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் வாக்குறுதி

புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் புவனகிரி பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரித்தார்.

கடலூர்

புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் புவனகிரி பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் புவனகிரி பேரூராட்சி பகுதியில் உள்ள பெரிய தேவங்கர் தெரு, புதுத்தெரு, சின்னப்ப முதலியார் தெரு,முள்ளிப்பள்ளம், சௌராஷ்டா தெரு, தாமரைக்குளம் தெரு, செட்டி தெரு, நண்பர்கள் நகர், கோட்டை மேட்டுத் தெரு, சன்னதி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, எம்ஜிஆர் நகர்உள்ளிட்ட 20 இடங்களில் கூட்ட ணிக்கட்சியினருடன் வாக்கு சேக ரித்தார். வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வாக்குசேகரிப்பின் போது அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவன் பேசுகையில், "இந்த தொகுதியின் அடிப்படை தேவை களை பூர்த்தி செய்வேன். திமுக ஒரு குடும்ப கட்சி. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். மக்கள் நலனில் அக்கரையுள்ள ஒரே கட்சி அதிமுக தான்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அமைந்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சிக்குவந்தவுடன் 6 சிலிண்டர் வழங்கப் படும், குடும்பத்தலைவிக்கு மாதம்ரூ.1,500, வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்று தெரிவித்தார். பிரச்சாரத்தின் போது வேட்பாளர் அருண்மொழிதேவன் முன்னிலை யில் அமமுகவில் இருந்து ஏராளமானோர் அதிமுகவில் இணைந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x