Published : 26 Mar 2021 03:17 AM
Last Updated : 26 Mar 2021 03:17 AM

வளமான தமிழகம் அமைந்திட அதிமுக ஆட்சி தொடர வேண்டும் : தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜயசீலன் பிரச்சாரம்

தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

வளமான தமிழகம் அமைந்திட அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் பிரச்சாரம் செய்தார்.

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளராக போட்டியிடும் அவர் நேற்று காலைகோமதிபாய் காலனி, குட்டி சங்கரப்பேரி, ஸ்டேட்பேங்க் காலனி, சக்தி விநாயகர்புரம், எழில்நகர், கந்தசாமிபுரம், அம்பேத்கர் நகர், சுந்தரவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அவர் பேசும்போது, ‘‘மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் வலிமையான இந்தியாவை உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி தமிழகத்தில் நடந்தால் தான் தமாகா தலைவர் ஜி.கே.வாசனின்கொள்கைப்படி வளமான தமிழகம்,வலிமையான பாரதத்தை உருவாக்க முடியும்.

எனவே, தமிழகத்தில் அதிமுகஆட்சி தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் அனைவருக்கும் இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் ரூ.1,500 வழங்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றார்.

பிரச்சாரத்தில் திமுக பகுதி செயலாளர் பொன்ராஜ், வட்டச்செயலாளர் முருகன், பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் செல்லப்பா, மனோகரன், தமாகா சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், மாநகர தலைவர் ரவிக்குமார், மாணவரணித் தலைவர் பொன்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமாகா வேட்பாளர் விஜயசீலனை தேர்தல் அலுவலகத்தில் விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் கமலஹாசன் என்பவர் தலைமையில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு விஜயசீலன் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x