Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM

மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கருத்து

கிருஷ்ணகிரி

மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர்ஆறுமுகத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ராகுல் - ஸ்டாலின் தலைமை ஒரு சிறந்த தலைமையாக கருதப்படு கிறது. தமிழக முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விரும்புவதை சுற்றுப்பயணம் மூலம் காண முடிந்தது. தமிழக மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டார்கள். எங்கள் கூட்டணியால் தமிழகத்தில் வளர்ச்சியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் தர முடியும். முதல்வர் பழனிசாமியின் ஆட்சியில் எந்தஒரு துறையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண முடியவில்லை. ஆனால் ஸ்டாலின் முதல்வராக வந்தால் முன்னேற்றத்தை கொடுப்பார் என மக்கள் நம்பு கிறார்கள்.

வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் பழனிசாமி தேர்தல் அறிக்கையில் கூறுவதை நம்ப முடியாது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இவர்கள் எவ்வளவு அரசுப் பணியிடங்களைத் தந்துள்ளார்கள்.

கிராமப் புறங்களில் ஊராட்சி பதவிகளை ஏலம் விடுவார்கள். அதே போல அதிமுகவில் முதல்வர் பதவி ஏலத்தில் எடுக்கப்பட்டது.

அதனால் மக்களின் உணர்வு களை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டு விட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் கொடநாடு பங்களாவில் கொலை,கொள்ளை சம்பவம் நடந்தது. அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x