Published : 24 Mar 2021 03:15 AM
Last Updated : 24 Mar 2021 03:15 AM

சிவகங்கை அதிமுக வேட்பாளரை : சிலம்பம் சுற்றி வரவேற்ற சிறுவர்கள் :

சிவகங்கை அருகே லட்சுமிபுரத்தில் சிலம்பம் சுற்றி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை வரவேற்ற சிறுவர்கள்.

சிவகங்கை: சிவகங்கையில் மதகுபட்டி, லட்சுமிபுரம், நாமனுர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் பிரச்சாரம் செய்தார். லட்சுமிபுரம் சென்ற அவருக்கு சிலம்பம் சுற்றி சிறுவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து வேட்பாளர் பேசுகையில், ‘குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வறட்சியை விரட்டி விவசாயம் செழிக்க, காவிரி-வைகை-குண்டாறு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதிமுக அரசு தொடர்ந்தால் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாகக் கிடைக்கும். வீடு இல்லாதோருக்கு வீடு கட்டித் தரப்படும். ஏற்கெனவே கூட்டுறவு பயிர்க் கடன், மகளிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்,’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x