Published : 24 Mar 2021 03:16 AM
Last Updated : 24 Mar 2021 03:16 AM

அரசு பள்ளி மாணவர்களுக்கு - மடிக்கணினி வழங்கிய சக்தி அம்மா :

பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி உயர்ரக மடிக்கணினிகளை வழங்கிய புரம் சக்தி அம்மா.

வேலூர்

மிகச்சிறிய செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்ட பென்னாத்தூர் அரசினர் பள்ளி மாணவர்களை பாராட்டி அதிநவீன மடிக்கணினிகளை புரம் சக்தி அம்மா பரிசாக வழங்கினார்.

வேலூர் அடுத்த பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேவேந்திரன், கவுதம் ஆகியோர் 40 கிராம் எடையுள்ள சிறிய செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினார்கள். கடந்த பிப்ரவரி 7-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் தேவேந்திரன், கவுதம் ஆகியோர் புரம் சக்தி அம்மாவை சந்தித்து சிறிய ரக செயற்கைக்கோள் தயாரிப்பு குறித்து விளக்கினர். இதையடுத்து, 2 மாணவர்களையும் பாராட்டிய சக்தி அம்மா, இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான உயர்ரக மடிக்கணினிகளை வழங்கினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x