Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM

10 பேர் மட்டும் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர் - தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 120 பேர் போட்டி :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று10 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 6 சட்டபேரவை தொகுதிகளிலும் 120வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 180 வேட்பாளர்கள், 204 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. அப்போது 74 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 130 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்றுமாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் விளாத்திகுளத்தில் ஒருவர், திருச்செந்தூரில் 3 பேர், வைகுண்டத்தில் 2 பேர்,ஓட்டப்பிடாரத்தில் ஒருவர், கோவில்பட்டியில் 3 பேர் என மொத்தம் 10 வேட்பாளர்கள் மட்டும் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். தொடர்ந்து 6 தொகுதிகளிலும் மொத்தம் 120 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிகபட்சமாக தூத்துக்குடிமற்றும் கோவில்பட்டி தொகுதிகளில் தலா 26 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். விளாத்திகுளத்தில் 15 பேர், திருச்செந்தூரில் 15 பேர், வைகுண்டத்தில் 21 பேர், ஓட்டப்பிடாரத்தில் 17 பேர் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x