Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 54 பேர் போட்டியிட உள்ளனர் :

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, 4 தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 54 பேர் களத்தில் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி மார்ச் 19-ம் தேதி முடிவடைந்தது. தேர்தலில் போட்டியிட விரும்பம் தெரிவித்து அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

மனுக்கள் மீதான பரிசீலினை கடந்த மார்ச் 20-ம் தேதி நடைபெற்றது. மார்ச் 22-ம் தேதி (நேற்று) மனுக்களை திரும்பப் பெறும் கடைசி நாளாக அறிவிக் கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்து கடைசி நேரத்தில் போட்டியிட விரும்பாத பலர் தங்களின்மனுக்களை நேற்று திரும்பப்பெற் றனர். பிற்பகல்3 மணியுடன் மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன.

அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 113 பேர் விண்ணப்பித் திருந்தனர். இதில், 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, 4 தொகுதிகளில் 54 பேர் போட்டியிட இருப்பதாக மாவட்ட தேர்தல் பிரிவு நேற்று இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 35 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 18 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2 பேர் மனுக்களை திரும்பப்பெற்றனர்.

அதன்படி, 20 பேர் போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து திமுக வேட்பாளர் நல்லதம்பி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வேட்பாளர் டி.கே.ராஜா, அமமுக வேட்பாளர் ஞானசேகர் மற்றும் சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 15 பேர் இறுதி வேட்பாளர் பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர்.

பிரதான அரசியல் கட்சிகளுக்கு அவர்களது கட்சி சின்னங்கள் ஒதுக்கப்பட்டு நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை கட்சிகளுக்கு பல்வேறு வகை யான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஜோலார்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் 29 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்த நிலையில், 16 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, ஜோலார் பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், வணிக வரித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி, திமுக வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜ் உட்பட 13 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 29 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனுக்கள் பரிசீலினையின்போது 16 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக, அதிமுக வேட்பாளர் செந்தில்குமார், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமதுநயீம் உட்பட 13 பேர் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கான சின்னங்களும் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 21 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன. இறுதியாக, அதிமுக வேட்பாளர் நஜர் முகமது, தற்போதைய எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான வில்வநாதன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜா உட்பட 13 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 113 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலை யில், 59 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டு, 54 பேர் போட்டியிட உள் ளனர்.

தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சிறு கட்சி வேட் பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x