Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு : சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு

தூத்துக்குடி

சட்டப்பேரவை தேர்தலில் வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று (மார்ச் 22) மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிட180 வேட்பாளர்கள் 203 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 73 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 6 தொகுதிகளிலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 130 பேர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். போட்டியில் இருந்து விலக நினைக்கும் வேட்பாளர்கள் இன்று மாலை 3 மணி வரை தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட ப்படும். இன்று மாலை 3 மணிக்கு 6 தொகுதி களிலும் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் விவரம் தெரியவரும்.

மேலும், தேர்தல் ஆணையத் தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் இன்று மாலையில் ஒதுக்கீடு செய்யப்படும். இதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்கும். வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சித் தலைவர்கள் வரும் ஏப்ரல் 4-ம் தேதி மாலை வரை பிரச்சாரம் செய்யலாம். அதன்பிறகு ஏப்ரல் 6-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

கட்சி, சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் இன்று மாலையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x