Published : 22 Mar 2021 03:15 AM
Last Updated : 22 Mar 2021 03:15 AM

வாக்கு எண்ணும் மையங்களில் - பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற தேர்தல் பார்வையாளர்கள்.

திருப்பத்தூர்

வாக்கு எண்ணும் மையங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடு களை செய்ய வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடு பணி கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர் களாக நியமிக்கப்பட்டுள்ள மினஹஜ்அலாம், நில்காந்த் எஸ்.ஆவாத், மனோஜ் காத்ரி மற்றும் காவல் பொது பார்வையாளர் அவினேஷ் குமார், தேர்தல் செலவின பார்வையாளர்கள் பிரவீன்குமார், விஜய்பஹதுர் வர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பணி அலுவலர்கள் (நோடல் ஆபீசர்ஸ்) நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நன்னடத்தை விதி முறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி மையங்கள் தயார்படுத்துதல், வாக்குச்சாவடி அலுவலர் களுக்கான பயிற்சி வகுப்பு, தபால் வாக்குகள் வழங்குதல், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குகள் செலுத்துவது குறித்த தேர்தல் பொது பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், சந்தேகங்கள் இருந்தால் அதை அங்கேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடு களை செய்ய வேண்டும்.

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் பிரிவுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில், எஸ்பி டாக்டர். விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் பணி அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x