Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் பரிசீலனைக்கு பின்னர் கடம்பூர் ராஜு, டிடிவி தினகரன், கீதாஜீவன் உட்பட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் 136 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. நேற்றுவேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துபிரதான கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 30 பேர் 34 மனுக்களைதாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் தலைமையில் நடைபெற்றது.
திமுக வேட்பாளர் கீதாஜீவன், தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், தேமுதிக வேட்பாளர் சந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ், சமத்துவ மக்கள்கட்சி வேட்பாளர் சுந்தர் உள்ளிட்ட26 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சார் ஆட்சியர் அறிவித்தார். 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட 32 பேர், 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் தனப்பிரியா தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில்,19 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது களத்தில் திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், அமமுக வேட்பாளர் வடமலைப்பாண்டியன் உட்பட 18 பேர் உள்ளனர்.
வைகுண்டம் தொகுதியில் 31 பேர் 33 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவரீகா தலைமையில் மனுக்கள் பரிசீலனை நடந்தது. 4 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதிமுக வேட்பாளர் சண்முகநாதன், காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட 38 பேர் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில், 15 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அமமுகபொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் கடம்பூர்ராஜு, மார்க்சிஸ்ட் வேட்பாளர்கே.சீனிவாசன் உட்படட 29 பேர் களத்தில் உள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் மொத்தம் 23 பேர் 26 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும்அலுவலர் அபுல்காசிம் தலைமையில் நடந்தது. இதில், 10 சுயேச்சைவேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன், அதிமுக வேட்பாளர் சின்னப்பன், அமமுக வேட்பாளர் சீனிச்செல்வி உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஓட்டப்பிடாரத்தில் 26 பேர் 30 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வநாயகம் தலைமையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 12 பேரின்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் சண்முகையா, அதிமுக வேட்பாளர் மோகன், புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி உள்ளிட்ட 18 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
போராட்டம்
வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து நாம் தமிழர்கட்சி வேட்பாளர் சுப்புலட்சுமி, மாவட்டச் செயலாளர் வேல்ராஜ், மாற்று வேட்பாளர் வைகுண்டமாரி ஆகியோர் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையத் தின் விதிகளை அதிகாரிகள் விளக்கியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT