Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - தேர்தல் பார்வையாளர்களை சந்திக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு :

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை பார்வையிட 3 பொதுப் பார்வையாளர்களும், 1 காவல்துறை பார்வையாளர், இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர் என மொத்தம் 6 பேர் வருகை தந்துள்ளனர்.

அதன்படி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டப்பேரவைத்தொகுதியின் பொது பார்வையாளராக மனோஜ் காத்ரி (93605-33678)நியமிக்கப்பட்டுள்ளார். வாணியம் பாடி பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் அறை எண் 1 மற்றும் 2 ஆகியவற்றில் தங்கிள்ள இவரை தேர்தல் விதி மீறல், கருத்துக்கள், ஆலோசனைகள் தொடர்பாக தினசரி காலை 10 மணி முதல் 11 மணி வரை சந்தித்து புகார் தெரிவிக்கலாம். ஜோலார்பேட்டை தொகுதி பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மினஹஜ் அலாம் (93443-92374), நாட்றாம் பள்ளி பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை அறை எண் 1-ல் தங்கியுள்ள இவரை காலை 10 மணி முதல் 11 மணி வரை சந்திக்கலாம். திருப்பத்தூர் தொகுதி பொது பார்வையாளர் நீல்காந்த் எஸ்.ஆவாத் (90427-97218), திருப்பத்தூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை அறை எண் 1-ல் தங்கியுள்ள இவரை தினசரி காலை 10 மணி முதல் 11 மணி வரை சந்திக்கலாம்.

ஏலகிரி ஹோட்டல் யாத்ரி நிவாஸில் தங்கியுள்ள காவல்துறை பொது பார்வையாளர் அவினேஷ் குமார் (90421-77205), காலை 10 மணி முதல் 11 மணி வரை சந்திக்கலாம். தேர்தல் செலவின பார்வை யாளர்கள் இரண்டு தொகுதிக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிக்கான செலவின பார்வையாளராக பிரவீன்குமார் (63743-83028) நியமிக்கப்பட்டுள்ளார். விண்ணமங்கலம் மொஹிப் ஷூஸ் நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.

ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள விஜய் பஹதுர் வர்மா (90427-97003) திருப்பத்தூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளார். இவர்களை, தினசரி காலை 10 மணி முதல் 11 மணி வரை சந்திக்கலாம்.

‘‘தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களிடம் தேர்தல் விதிமீறல், ஆலோசனைகள், கருத்துகள் குறித்து சம்பந்தப்பட்ட தொகுதி பார்வையாளரிடம் நேரில் அல்லது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்’’என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x