Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM

தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் உட்பட 20 வேட்பாளர்கள் மனு தாக்கல் :

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார். (அடுத்த படம்) ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா வேட்புமனு தாக்கல் செய்தார்.

தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் முருகசெல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர்அமைச்சர் கூறும்போது, “தமிழகமுதல்வர் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். சங்கரன்கோவில் தொகுதியில் மக்களுக்கு பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

சங்கரன்கோவில் தொகுதி திமுகவேட்பாளர் ராஜா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரகுமாரி, பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர் பாலமுருகேசன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஆலங்குளம்

ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாஎம்எல்ஏ தேர்தல் அலுவலர் ராஜ மனோகரனிடம் வேட்புமனு தாக்கல்செய்தார். பின்னர், அவர் கூறும்போது, “ஆலங்குளம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை விடுத்தால், அது நிச்சயம் நிறைவேற்றப்படும். ஆலங்குளத்தில் நவீன வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 163 கிராமங்களுக்கு தேவையான நிலுவையில் உள்ள ரூ.47.50 கோடிமதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்படும்.” என்றார்.

ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பூல்பாண்டி மனு தாக்கல் செய்தார்.

வாசுதேவநல்லூர்

வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அ.மனோகரன் எம்எல்ஏசிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக நந்திதா என்பவரும் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு மனு தாக்கல் செய்தார்.

மதிமுகவைச் சேர்ந்த டாக்டர் சதன் திருமலைக் குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதால் திமுக வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.

கடையநல்லூர்

கடையநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முத்துலெட்சுமி, புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளர் ராஜாராம், சுயேச்சை வேட்பாளர்கள் ராஜா பொன்னுசாமி, ஆவணிராஜா, மாரிதுரை பாண்டியன், ராஜி ஆகியோர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷீலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்ர்.

தென்காசி

தென்காசி தொகுதி அமமுகவேட்பாளர் முகமது தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், தென்காசி தொகுதியில் அண்ணா திராவிடர் கழகம் சார்பில் முருகன் என்ற உதயகுமார், சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும் சேர்த்து நேற்று ஒரே நாளில் மொத்தம் 20 வேட்பாளர்கள் 23 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், ஆலங்குளம் தொகுதிபனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி ஆகியோர் கூடுதலாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x