Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் மற்றும் மத்திய அரசு வங்கி பணியாளர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்சிவன் அருள் தலைமை வகித்துப்பேசும்போது, "சட்டப்பேரவைத் தேர்தல் நேர்மையாக நடைபெற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத் தூர் மாவட்டத்தில் நடைபெறும்முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் மாவட்ட தேர்தல் பிரிவு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,371 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 157 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டுள் ளன. ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலில் ஒரு சில சம்பவங்களை கண்டறிந்து, பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசின் பணியாளர்களை நேரடியாக வாக்குப்பதிவு நாளன்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நுண் பார்வையாளர்கள் நேரடியாக தேர்தல் பொது பார்வையாளர்களின் கட்டுப்பாட்டில் இனி வரும் நாட்களில் பணியாற்றுவார்கள்.
பொது பார்வையாளர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளை பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு அன்று காலை முதல் நண்பகல் 1 மணி வரை வாக்குப்பதிவுகளை கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொருவரும் தங்களின் பதிவை பொது பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு நுண் பார்வையாளர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். பணி ஒதுக்கீடு கணினி முறையில் நடத்தி பணி ஆனை வழங்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை நன்கு ஆராய்ந்து மாவட்ட காவல் துறையினர் அங்கு பாதுகாப்பை ஏற்கெனவே உறுதி செய்துள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணியிடத்தில் பதற்றமான வாக்குச் சாவடி பகுதியின் தகவல்களை முன்கூட்டியே கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகளை வழங்கலாம். நுண் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் மின்னணு பயிற்சி வகுப்பு மற்றும் படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற தகவல்களை முறையாக கேட்டறிந்து நியாய மான வாக்குப்பதிவு நடைபெற பணியாற்ற வேண்டும்’’ என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், தேர்தல் வட்டாட்சியர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொது பார்வையாளர்கள் தெரிவிக்கும் ஆலோசனை களை பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு அன்று காலை முதல் நண்பகல் 1 மணி வரை வாக்குப்பதிவுகளை கண்காணிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT