Published : 17 Mar 2021 03:16 AM
Last Updated : 17 Mar 2021 03:16 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில், 4 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 2-வது நாளான நேற்று முன்தினம், திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் தலா 2 பேரும், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் மற்றும் செய்யாறு தொகுதியில் தலா ஒருவரும் என மொத்தம் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். செங்கம்(தனி), போளூர் மற்றும் வந்தவாசி(தனி) ஆகிய 3 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. மாவட்டத்தில் இதுவரை 42 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT