Published : 16 Mar 2021 03:15 AM
Last Updated : 16 Mar 2021 03:15 AM
தஞ்சாவூர்/ திருவாரூர்/ நாகப்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் உட்பட 2 பேர், கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன், பாபநாசம் தொகுதியில் அமமுக வேட்பாளர் எம்.ரங்கசாமி, திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன், அமமுக வேட்பாளர் வேலு.கார்த்திகேயன், பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசன், தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.அறிவுடைநம்பி உட்பட 3 பேர், ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.ராமச்சந்திரன் உட்பட 2 பேர், பட்டுக்கோட்டை தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்டிஎஸ்.செல்வம் என தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பேராவூரணி தொகுதியில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில்...
திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், திமுக வேட்பாளர் பூண்டி கே.கலை வாணன் உட்பட 3 பேர், நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், திமுக வேட்பாளர் எஸ்.ஜோதிராமன் உட்பட 4 பேர், மன்னார்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கம், திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா, அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் உட்பட 5 பேர், திருத் துறைப்பூண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.எஸ்.சுரேஷ்குமார் உட்பட 2 பேர் என திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 14 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நாகை, மயிலாடுதுறையில்...
இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT