Published : 14 Mar 2021 03:17 AM
Last Updated : 14 Mar 2021 03:17 AM
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 3 செலவினப் பார்வையாளர்கள் நேற்று வந்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வு செய்யவும், செலவினங்களை மேற்பார்வையிடவும் தேர்தல் ஆணையத்தால் 3 செலவினப் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள குண்டன் யாதவை செல்போன் எண் 9489947507-லும், திருச்செந்தூர் மற்றும் வைகுண்டம் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் தீபக்கை9489947508-லும், ஓட்டப்பிடாரம்மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சுரேந்திர குமார் மிஸ்ராவை 9489947509-லும் தொடர்பு கொண்டுபொதுமக்களும் அரசியல் கட்சி யினரும் புகார் அளிக்கலாம்.
மேலும், தேர்தல் பார்வையாளர்களை அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம், எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT