Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக் கோட்டை, ராஜபாளையம், திருச்சுழி தொகுதிகளில் திமுக போட்டி யிடு கிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சிவகாசி மற் றும் வில்லிபுத்தூர் தொகுதிகளும் சாத்தூர் தொகுதி மதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், திமுக போட்டியிடும் 4 தொகுதிகளிலும், கடந்த தேர்தலிலும் அக் கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று ராஜபாளையம், அருப் புக்கோட்டை, சாத்தூர், வில்லிபுத்தூர், சிவகாசி தொகுதிகளில் அதிமுகவும், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக விருதுநகர் தொகுதியிலும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் திருச்சுழியிலும் போட்டியிடுகின்றன. இதில்ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகளில் மட்டும் திமுகவும், அதிமுகவும் நேரடிப் போட்டியில் களம் இறங்குகின்றன.
கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சரான கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சிவகாசி தொகுதியில் செல்வாக்கு குறையத்தொடங்கியதால் ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார். சாத்தூர் தொகுதி இடைத்தேர்த லில் வெற்றிப்பெற்று எம்எல்ஏ ஆன ராஜவர்மன் தனக்கு அதிமுக வாய்ப்புதராததால் அம முகவில் இணைந்தார்.
தற்போது அமமுக வேட்பாளராக சாத்தூர் தொகுதியில் மீண்டும் இத் தேர்தலில் களமிறங்குகிறார்.
அதோடு ராஜவர்மனின் ஆதரவா ளர்கள் ராஜபாளையம் பகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ பாளையம் தொகுதியில் வலுப்பெற்று உள்ள திமுக, தனது வாக்குவங்கியைச் சிதறாமல் வைத்துள்ளது. மேலும், சாத் தூர் தொகுதியிலும் ராஜவர்மனுக்கு உள்ள செல்வாக்கு காரணமாக, அதி முகவின் பலம் குறைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விருதுநகர் தொகு தியில் கரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கிய மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் கோகுலம் தங்கராஜும் தனக்கு வாய்ப்புக் கிடைக்காத விரக்தியில் அமமுகவில் இணைந்துள்ளார்.
இதனால், விருதுநகர் தொகுதியிலும் அதிமுகவின் வாங்கு வங்கி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, திருச்சுழி தொகுதியிலும் இம்முறை மூமுகவைச் சேர்ந்த பிரபலம் இல்லாத வேட்பாளரால், அத் தொகுதியில் போட்டியிடும் தங்கம் தென்னரசுவுக்கு வெற்றிவாய்ப்பு சுலபமா கும் என நடுநிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT