Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM
திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் கடந்த 50 ஆண்டுகளில் 2 தோல்வி, 9 வெற்றியுடன் 12-வது சட்டப்பேரவைத் தேர்தலை காட்பாடி தொகுதியில் சந்திக்க உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளி யான நிலையில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. எதிர்பார்த்தபடியே காட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட உள்ளார்.
கடந்த 1971-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் அவருக்கு இது 12-வது சட்டப்பேரவைத் தேர்தல் ஆகும். கடந்த50 ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் 2 தோல்வி, 9 வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். காட்பாடி தொகுதியில் மட்டும் 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பதவிகளை கடந்தவர்
காட்பாடி பகுதி திமுக நிர் வாகிகள் கூறும்போது, ‘‘திமுகவில் தலைவருக்கு அடுத்த இடத்தில் பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு இந்த முறை காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தேர் தலில் அவரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம். வரும் திங்கள்கிழமை முதல் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT