Published : 05 Mar 2021 03:18 AM
Last Updated : 05 Mar 2021 03:18 AM

வெடிமருந்து கிடங்குகளில் எஸ்பி ஆய்வு :

தூத்துக்குடி

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தெய்வச்செயல்புரம், கீழத்தட்டப்பாறை மற்றும் மேலத்தட்டப்பாறை பகுதிகளில் உள்ள வெடிமருந்து கிடங்குகளில் எஸ்பி ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், சாயர்புரம் அருகே சிவலூரில் உள்ள வெடிமருந்து விற்பனை கிடங்கு மற்றும் வைகுண்டம் அருகே பத்மநாபமங்கலம் பகுதியில் உள்ள வெடிமருந்து விற்பனை கிடங்கு ஆகியவற்றை எஸ்.பி. ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார். வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், ஏரல் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x