Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM
கலசப்பாக்கம் அருகே உள்ள பருவதமலையில் ஏறிச் சென்ற கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சென்னை தண்டையார் பேட்டை பகுதியில் வசிப்பவர் குணசீலன். இவரது நண்பர்களான ஆவடியைச் சேர்ந்த அபி, கார்த்திக், புதுப்பேட்டையை சேர்ந்த வசிப்பவர் விக்னேஷ். இவர்கள், 4 பேரும் வாடகை கார் மூலமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலத்தில் உள்ள பருவதமலையில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள், 4,560 அடி உயரம் உள்ள பருவதமலையில் ஏறினர். இவர்களுடன், திண்டுக்கல் மாவட்டம் சிரங்காட்டுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் கார் ஓட்டுநர் முபாரக் அலியும்(33) ஏறிச் சென்றார். மலை உச்சிக்கு செல்லும் வழியில் கடப்பாரை படி அருகே சென்றபோது, முபாரக் அலி சிரமப்பட்டுள்ளார்.
இதனால் அவர், அங்கேயே தங்கிவிட்டார். இதையடுத்து, நண்பர்கள் 4 பேரும் மலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். கடப் பாரை படிக்கு வந்தபோது, முபாரக் அலி உயிரிழந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், டோலி மூலமாக மலையில் இருந்து அடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்ட முபாரக் அலியின் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கடலாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேதப் பரி சோதனை அறிக்கையின் அடிப் படையில் விசாரணை நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT