Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM

விருதுநகர் மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்

விருதுநகர்மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 119-வது பிறந்த நாளையொட்டி, மதுரை சாத்தமங்கலம் நினைவிட வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ மாலை அணிவித்தார். உடன், ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன், மாணிக்கம் எம்எல்ஏ, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன்.

விருதுநகர் மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்களை பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் இரா.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை வட்டாட்சியர் சிவஜோதி விருதுநகருக்கும், அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ரமணன் விருதுநகர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர் ரவீந்திரன் ஞானராஜ் அருப்புக் கோட்டை சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், சாத்தூர் வட்டாட்சியர் சிவக்குமார் திருச்சுழி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிப்காட் நில எடுப்பு அலகு-1 தனி வட்டாட்சியர் சிவக்குமார் திருச்சுழி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், சிவகாசி சுற்றுச்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியர் சந்திரசேகரன் காரியாபட்டி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி வட்டாட்சியர் வெங்கடேஷ் சாத்தூர் வட்டாட்சியராகவும், சிவகாசி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ராஜாஉசேன் வெம்பக்கோட்டை வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட் டுள்ளனர்.

ராஜபாளையம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ரெங்கசாமி வெம்ப க்கோட்டை சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், வெம்பக்கோட்டை சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ரெங்கநாதன் ராஜபாளையம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், சாத்தூர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் சிவகாசி வட்டாட்சியராகவும், விருதுநகர் டாஸ்மாக் உதவி மேலாளர் விஜயலட்சுமி சிவகாசி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், வத்திராயிருப்பு வட்டாட்சியர் ராமதாஸ் வில்லிபுத்தூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், சிவகாசி நிகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அன்னம்மாள் வத்திராயிருப்பு வட்டாட்சியராகவும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x