Published : 06 Feb 2021 03:17 AM
Last Updated : 06 Feb 2021 03:17 AM
ராமநாதபுரம், சிவகங்கை மாவட் டங்களில் பலத்த மழையால் சேதமடைந்த பயிர்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஜனவரியில் பலத்த மழை பெய்ததால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 79,210 ஹெக்டேர் நெற்பயிர்களும், 4059 ஹெக்டேர் சிறுதானியப் பயிர்களும், 3030 ஹெக்டேர் பயறு வகைகளும், 1297 ஹெக்டேர் எண்ணெய் வித்துப் பயிர்கள் என மொத்தம் 87,596 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உள்து றை இணைச் செயலர் அசுடோஷ் அக்னிஹோத்ரி தலைமையில், மத்திய வேளாண் இயக்குநர் மனோகரன், மத்திய நிதித் துறை துணை இயக்குநர் மகேஷ் குமார், மத்திய ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த சின்னசாமி ஆகிய 4 பேர் அடங்கிய மத்திய குழுவினர் மண்டபம் ஊரா ட்சி ஒன்றியம் குயவன்குடி, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி கிராமங்களில் சேதமடைந்த நெற்பயிர்களையும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ஆலங்குளம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தாளியரேந்தல் கிராமங்களில் மிளகாய் பயிர்க ளையும், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருங்குடி, திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கற்காத்தகுடி கிராமங்களில் நெற் பயிர்களையும் ஆய்வு செய்தனர்.
அப்போது பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
ஆய்வின்போது தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகநாதன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ.சிவகாமி, ராமநாதபுரம் சார்-ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, வேளாண் துணை இயக்குநர் எஸ்.எஸ்.ஷேக் அப்துல்லா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் 36,031 ஹெக்டேர் நெல், 91 ஹெக்டேர் வாழை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.ராமநாதபுரத்தில் பயிர்ச் சேதங் களைப் பார்வையிட்ட பின்னர் இக்குழுவினர் தேவகோட்டை அருகே உள்ள கற்களத்தூர் கிரா மத்துக்குப் பிற்பகல் 2.10 மணிக்கு வந்தனர். அங்கு சேதமடைந்த பயிர்களைப் பார்வையிட்டனர். பின்னர் சிவகங்கை அருகே அல்லூர் பனங்காடி பகுதியில் சேதமடைந்த பயிர்களைப் பார் வையிட்டனர்.
இவர்களுடன் சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண் இணை இயக்குநர் வெங்கடேசன் உள்ளிட்டோரும் வந்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து ள்ளோம்.
ஆனால் மாநில அரசு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே அறிவித்தது. மத்திய குழுவிடம் தெரிவித்தால் கூடுதலாகக் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், எங்களது வேதனையை கேட்காமலேயே குழு சென்றுவி ட்டது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT