Published : 05 Feb 2021 03:18 AM
Last Updated : 05 Feb 2021 03:18 AM

திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.104 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

திருப்பத்தூரில் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.104.01 கோடி மதிப்பில் அமைக் கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சியர் சிவன் அருள் திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சியின் மொத்த பரப்பளவு 9.90 சதுர கிலோ மீட்டராகும். திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்த கடந்த 2018-ம் ஆண்டு திட்ட மிடப்பட்டது. இதற்காக ரூ.104.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2018-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகள் தற்போது முடிவுபெற்று காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று காலை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசும்போது, "திருப்பத்தூர் நகராட்சியில் 2046-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி ரூ.104.01 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நகரம் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மண் வார்ப்பு, இரும்பு மற்றும் கான்கீரிட் குழாய்கள் அமைக் கப்பட்டுள்ளன. 3,340 ஆழ்துளைக் குழிகள், 10,674 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட் டுள்ளன.

இதற்கான பிரதான கழிவுநீர் உந்து நிலையம் திருப்பத்தூர் ஜார்ஜ்பேட்டையிலும், துணை கழிவுநீர் உந்து நிலையம் பெரியார் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, பி.கே.புரம், திருமாள் நகர், காயிதேமில்லத் நகர், வெங் கடேஸ்வரா நகர், சாமியார் குட்டை பகுதி, வேலன் நகர் என மொத்தம் 6 இடங்களில் கழிவுநீர் தூக்கி நிலையமும், கவுதம்பேட்டை பகுதியில் கழிவுநீர் தூக்கி ஆள்நுழை குழி (மேன்ஹோல்) அமைக்கப்பட்டுள்ளது.

துணை கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் பிரதான கழிவுநீர் உந்து நிலையத்தில் சேகரிக்கப்படும் கழிவுநீர் ஜார்ஜ்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். இங்கு 1,143 எம்.எல்.டி கழிவுநீரை சுத்திகரிக்க நவீன தொழில்நுட்ப முறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 3 எம்.எல்.டி கழிவுநீர் சுத்திகரிக்கப் பட்டு வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது’’. என்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் ராம்சேகர், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் டி.டி.குமார், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் மீனா, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, வாணி யம்பாடி அடுத்த இருணாப்பட்டு கிராமத்தில் பாம்பாற்றின் குறுக்கே ரூ.1.19 கோடி செலவில் தடுப்பணை அமைப்பதற்கான பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த தடுப்பணை 35 மீட்டர் நீளமும், 1.50 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளன.

இந்த தடுப்பணையால் 1 கிலோமீட்டர் தொலைவுள்ள சுற்று வட்டாரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், சுமார் 158.68 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x