Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM
5-ம் வகுப்பு முதல் பட்டப்பிடிப்பு வரை படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு (தேர்ச்சி/ தேர்ச்சி பெறாதவர்கள்) வரை படித்தவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 15 முதல் 45 வரை வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், சேலம்-7 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்துக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, 3 புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் கல்வி சான்றுகளுடன் நேரில் வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்கள் அறிய 0427-2400 329, 94990 55827, 98659 13900, 94427 94071, 94422 08464 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT