Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில், 32-வது சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் திருப்பூர்வடக்கு, தெற்கு வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய சாலைகளின் வழியாக வீரபாண்டி சென்று தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்று பேரணி நிறைவு பெற்றது.
அவிநாசி
காங்கயம்
காங்கயத்தில் வாகன விழிப்புணர்வு பேரணியை, காங்கயம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் தனராஜ் தொடங்கி வைத்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஷ்குமார், மோட்டார் வாகன காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.தன்னார்வலர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் தலைக் கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் பங்கேற்றனர். காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா அருகே தொடங்கி திருச்சி, தாராபுரம், கோவை, திருப்பூர் சாலைகள் வழியாக சென்று, தொடங்கிய இடத்தில் நிறைவு பெற்றது.
உடுமலை
உடுமலையில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், உடுமலை காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார், போக்குவரத்து ஆய்வாளர் செல்வதீபா ஆகியோர் கலந்துகொண்டனர்.
காவல்துறை, ஊர்க்காவல் படையினர், தனியார் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
உடுமலை குட்டைத்திடலில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் தளி சாலை, பழநி சாலை, பேருந்து நிலையம், ராஜேந்திரா சாலை என முக்கிய சாலைகளின் வழியாக மீண்டும் குட்டைத்திடலில் நிறைவடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT