Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM
திமுக ஆட்சிக்கு வந்ததும் நரிப்பையூர் கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் மீண்டும் செயல் படுத்தப்படும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
திமுக மாநில மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி., ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மேற்கொண்டார். சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் பனைத் தொழிலாளர்கள், சாயல் குடியில் வர்த்தகர்கள், மேலக் கிடாரத்தில் வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத் தொழிலா ளர்கள் ஆகியோருடன் கலந்துரை யாடினார்.
இதைத் தொடர்ந்து சாயல்குடி உறைகிணறு பகுதியில் மக்கள் கிராமசபைக் கூட்டம், கடலாடி, முதுகுளத்தூரில் வேன் மூலம் பிரச்சாரம் செய்தார். சாயல்குடி மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:
நரிப்பையூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் திட்டம் என்பதால் இத்திட்டத்தை கைவிட்டுவிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் இப்பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம், நரிப்பையூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
உள்ளாட்சித் துறை அமைச் சராக இருந்த ஸ்டாலின், லட்சக் கணக்கான சுய உதவிக் குழு பெண்களுக்கு சுழல் நிதி, மானி யம் வழங்கினார். ஆனால் இப்போது இந்த இரண்டு நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் கடன், சுழல் நிதி, மானியம் வழங் கப்படும்.
முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகள், மாணவர்களுக்கான உதவித் தொகை வழங்க அரசிடம் பணம் இல்லை என்கின்றனர். ஆனால் மக்கள் வரிப் பணத்தை கோடிக்கணக்கான ரூபாய் விளம்பரத்துக்காக செலவிடுகின் றனர். இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின்போது முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, நவாஸ்கனி எம்.பி., மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங் கம், மாநில மகளிர் அணி துணைத் தலைவர் பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT