Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM
தென்காசி மாவட்டத்தில் மேலநீலிதநல்லூர் வட்டரத்தில் பயிர் சேதம்குறித்து வேளாண் இயக்குநர்அலுவலகத்தில் இருந்து வந்தமாநிலக்குழு ஆய்வு மேற்கொண்டது.
தலைமையிடத்து துணை இயக்குநர் விஜயலட்சுமி தலைமையில், வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, மேலநீலிதநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் நயினார் முகம்மது, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, வட்டாட்சியர் திருமலைச்செல்வி, வேளாண் அலுவலர் அறிவழகன், துணை வேளாண் அலுவலர் ரவிசந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து வருவாய் கிராமங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை பதிவு செய்து, இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் அடங்கல், பட்டா, ஆதார்அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் மற்றும் ரேஷன்கார்டு ஆகியவற்றின் நகல்களுடன்பகுதி கிராம நிர்வாக அலுவலரைஅணுகி உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தகுதியான நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க உரிய பரிந்துரை மேற்கொள்வார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT