Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

மக்களின் மனம் கவர்ந்த பச்சையப்பாஸ் சில்க்ஸ் ஆடைகள்

வேலூர்

தமிழர் திருநாளான பொங்கல் தமிழகமெங்கும் தமிழர்கள் இருக்கும் இடமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

உழவர்கள் தங்களுக்கு உறு துணையாக இருந்த எருதுகள் மற்றும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். கிராமங்களில் காலையில் எழுந்து சூரியனை நோக்கி பொங்கல்பானை வைத்து புத்தாடை அணிந்து பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

அப்படிப்பட்ட உன்னதமான பொங்கல் பண்டிகைக்கு வேலூர் பச்சையப்பாஸ் சில்க்ஸ் தமிழர் உடைகளான சேலைகள்,வேட்டி ரகங்கள், குழந்தைகளுக்கான பாவாடை மற்றும் ஆண் குழந்தைகளுக்கு சிறிய வேட்டி ரகங்கள் சிறப்பு விற்பனைக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாது ஐந்து மாடிகளிலும் அனைத்து தரப்பினர் மனம் கவரும் வகையில்நவநாகரீகம் முதல் பண்டையகால ஆடைகள், பட்டாடைகள் விற் பனைக்கு உள்ளது. இங்கு தரைத் தளம் சேலைகள் பிரிவு (ம) மேட்சிங், முதல் தளம் பட்டு சேலைகள் பிரிவு, இரண்டாம் தளம் பெண்களுக்காகவும், மூன்றாம் தளம் குழந்தைகளுக்காகவும், நான்காம் தளம் மெட்ரியல் (ம) காலணிகள் பிரிவாகவும், ஐந்தாம் தளம் ஆடவர்களுக்காகவும் ஜவுளி ரகங்கள் விற்பனையாகிக் கொண்டுள்ளது.

பாரம்பரியமிக்க நம் தமிழர் களின் பொங்கல் திருநாளை நம் பாரம்பரியத்தை என்றும் பறைசாற்றும் பச்சையப்பாஸ் ஆடைகளுடன் சிறப்பாக கொண்டாடுவோம். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x