Published : 25 Dec 2020 03:17 AM
Last Updated : 25 Dec 2020 03:17 AM
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த பனைத் தொழிலாளி கிறிஸ்துமஸ்பண்டிகையை முன்னிட்டு பனை ஓலையில் வேளாங்கண்ணி தேவாலயத்தை உருவாக்கி யுள்ளார்.
கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (60). பனைத் தொழிலாளியான இவர் பனை ஓலையில் 7 அடிய உயர காமராஜர் சிலை, அப்துல் கலாம் சிலை, உழவன் சிலை, பள்ளி செல்லும் குழந்தைகள் சிலை என பல்வேறு சிலைகளை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.
இம்மாதம் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு 7 அடி உயரத்தில் ஜெயலலிதா உரு வத்தை பனை ஓலையில் உரு வாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் வேளாங்கண்ணி தேவாலயத்தை பனை ஓலையில் பால்பாண்டி உருவாக்கி நேற்று தனது வீட்டில் பார்வைக்கு வைத்தார். அப்பகுதியைச் சேர்ந்த பலரும் அங்கு வந்து, அதை பார்த்து ரசிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT