Published : 13 Dec 2020 03:16 AM
Last Updated : 13 Dec 2020 03:16 AM
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் மு.ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
108 திவ்ய தேசங்களில் 47-வது திவ்ய தேசமானதும், மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி டிச.16 முதல் ஜன.13 வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். முற்பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும்.
டிச.15-ல் வைகுண்ட ஏகாதசி பெருவிழா (பகல் பத்து இராப்பத்து) தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான பரம பதவாசல் திறப்பு டிச.25-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும். இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT