Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மார்கழி நடைதிறப்பு நேரத்தில் மாற்றம்

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத் திருப்பள்ளியெழுச்சி பூஜையை முன்னிட்டு டிச.16-ம் தேதி (மார்கழி 1-ம் தேதி) முதல் ஜன.13-ம் தேதி வரை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7.45 மணிக்கு நடை சாத்தப்படும். டிச.21-ம் தேதி மாணிக்கவாசகர் காப்புக்கட்டுதல், டிச.26-ம் தேதி கார்த்திகை மற்றும் சனிப்பெயர்ச்சி, டிச.29-ம் தேதி பெளர்ணமி மாணிக்கவாசகர் தேர் ராட்டினம். டிச.30-ம்தேதி ஆருத்ரா தரிசனம் ஆகியவை நடைபெறும். டிச.31-ம் தேதி தொடங்கும் எண்ணெய் காப்பு திருவிழா ஜனவரி 4-ம் தேதி நிறைவு பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x