Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM
குமரி மாவட்டம் களியக்கா விளை யைச் சேர்ந்த அசோக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக் கல் செய்த மனு:
கன்னியாகுமரி மாவட்டம் மதங்கள் தொடர்புடைய பதற்ற மான பகுதி. பல ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு மதக் கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 1998-ல் தேங்காய்பட்டினத்தில் இரு தரப்பினர் வெடி குண்டுகளை வீசி மோதிக் கொண்டனர்.
இது குறித்து விசாரிக்க தமி ழக அரசு, நீதிபதி முருகேசன் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் விசாரணை நடத்தி அரசிடம் 2000-ல் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், குமரி மாவட்டத்தில் பணிபுரியும் 90 சதவீத போலீஸார் உள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள். பெரும்பாலான காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய் வாளர்கள் உள்ளூரில் பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றவர்கள். இதனால் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளூர் காவலர்களின் பேச்சைக் கேட்க வேண்டி உள்ளது.
பெரும்பாலான போலீஸார் குற்றங்களில் ஈடுபடுவோர், புகார் அளிக்க வருவோருக்கு உறவினர்களாகவும், நண்பர்களாக வும் இருக்கின்றனர். இதனால், குமரி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலையைச் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் பணிபுரியும் உள்ளூர் போலீஸாரை வேறு மாவட்டங்களுக்கு மாற்ற அர சாணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் குமரி மாவட்டத்தில் தற்போதும் உள்ளூர் போலீஸாரே பணியில் உள்ளனர். இதனால் மாவட் டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.
எனவே, குமரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந் தோரை காவலர்கள் மற்றும் அதிகாரிகளாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி விசா ரித்தனர். அப்போது நீதிபதிகள், நீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் காவல் துறையில் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரியக்கூடாது என 2000-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை. குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பதற்றமான சூழல் தொடர்வது ஏன்? குமரி மாவட்ட காவல்துறையில் அதே மாவட்டத்தை சேர்ந்தோர் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்? 2000-ம் ஆண்டு அரசாணை எப்போது அமல்படுத்தப்படும்? என்பது தொடர்பாக உள்துறைச் செயலர், டிஜிபி ஆகி யோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.18-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT