Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM
அதன்படி டிச.10 முதல் ஜன.1 வரை மதுரை - சென்னை பாண்டியன், செங்கோட்டை-சென்னை பொதிகை ஆகிய சிறப்பு ரயில்களும், டிச. 11 முதல் ஜன.29 வரை சென்னை - மதுரை - சென்னை வைகை, சென்னை - மதுரை பாண்டியன் , சென்னை - செங்கோட்டை பொதிகை ஆகிய சிறப்பு ரயில்களும் டிச.11 முதல் ஜன. 22 வரையிலும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
இதேபோன்று நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில், டிச.17 முதல் ஜன. 28 வரை, சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில், டிச.16 முதல் ஜன. 27 வரை, கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் சிறப்பு ரயில், டிச. 12 முதல் ஜன.25 வரை டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி ஆகிய சிறப்பு ரயில்களும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும் ராமேசுவரம்-புவனேஸ்வர் சிறப்பு ரயில் டிச. 13, 20, 27 ஆகிய நாட்களிலும், புவனேஸ்வர் - ராமேசுவரம் சிறப்பு ரயில் டிச. 11, 18, 25 தேதிகளிலும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என, மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT