Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM

சாலை தடுப்புகளில் விளம்பரங்கள் அகற்றப்படுமா? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளில் இடம் பெற்றுள்ள விளம்பரங்களை அகற்றுவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக் கல் செய்த மனு:

தமிழகத்தில் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. கடந்த ஆண்டு நடந்த 57,228 சாலை விபத்துகளில் 10,525 பேர் உயிரிழந்தனர், 67,132 பேர் காயமடைந்தனர்.

தொழிற்சாலைகள், நிறுவனங் களுக்கு முன்புள்ள சாலைத் தடுப்புகளில் விளம்பரம் செய் யும் வகையில் தடுப்புகள் வைக்கப்படுகின்றன.

அவற்றில் ஒளிரும் பட்டைகள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன.

எனவே, தமிழகத்தின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் கால் நடைகள் சுற்றித் திரிவதைத் தடுக்கவும், சாலைத் தடுப்புகளை அகற்றவும், சாலைத் தடுப்புகள் அமைப்பது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை நீதிபதிகள் என்.கிருபா கரன், பி.புகழேந்தி விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேக நிர் ணயம், தடுப்புகளில் உள்ள விளம்பரங்களை அகற்றுவது ஆகியவை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.17-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x