Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM

காட்டாற்றில் சிக்கி இறந்தவர் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசு பணி

காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த முத்தீஸ்வரனின் மனைவி சிவரஞ்சனிக்கு பணி ஆணையை வழங்கினார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன்.

விருதுநகர்: காட்டாற்றில் குளித்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், வில்லிப்புத்தூர் வட்டம் கோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி மகன் சி.முத்தீஸ்வரன்(21). கடந்த மாதம் 19-ம் தேதி தனது நண்பர்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பேயனாறு ஓடையில் குளிக்கச் சென்றார். அப்போது திடீரென பெய்த கனமழையின் காரணமாக பேயனாறு ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முத்தீஸ்வரன் உட்பட அவரது நண்பர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். முத்தீஸ்வரன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். முத்தீஸ்வரனுக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் சமிர்தா என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது கணவரை இழந்து வாழும் சிவரஞ்சனி ஆதரவின்றி சிரமப்பட்டார். அவரது தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவர். தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டார்.

இதையடுத்து சிவரஞ்சனியின் வாழ்வாதாரம் மற்றும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு கருணை அடிப்படையில் வில்லிபுத்தூர் வட்டம் மங்காபுரம் காளியம்மன் கோயில் அங்கன்வாடி மையத்தில் உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x